விசாகப்பட்டிணத்தில் ஆலையில் ரசாயன வாயு கசிவுனால் உயிரிழப்பு : காயல் அப்பாஸ் இரங்கல் !

Breaking News

header ads

விசாகப்பட்டிணத்தில் ஆலையில் ரசாயன வாயு கசிவுனால் உயிரிழப்பு : காயல் அப்பாஸ் இரங்கல் !

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .

ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டிணம் அருகே உள்ள ஆர் ஆர் வெங்கடபுரம் என்கிற கிராமத்தில் எல் ஜி பாலிமர்ஸ் என்ற ரசாயன தொழிற்ச்சாலை உள்ளது . நேற்று காலையில் இந்த ஆலையில் இருந்து  ரசாயன வாயு கசிந்து வெளியேறி உள்ளது .மேலும் ரசாயன வாயு கசிவுனால் சாலையில் நடந்து சென்றவர்கள் விடுகளில் இருந்தவர்களுக்கும் கண் எரிச்சல்  மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு பலரும் மயங்கி கீழே விழுந்து உள்ளனர் . இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது .

மேலும் சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்பு படையினர் விரைந்து சென்று மயங்கி கீழே விழுந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதில் சிறிது நேரத்திலயே குழந்தைகள் உள் பட 3 பேர் இறந்துள்ளனர் மற்றும் மருத்துவ மனையில் 8 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தி மிகுந்த வேதணை அளிக்கிறது .

 எல் ஜி பாலிமர்ஸ் தொழிற்ச்சாலை  நிர்வாகத்தினர்கள் மீது எந்தவித பாரபட்சம் பாராமல் அம்மாநில அரசு சட்ட படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது  .

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் தெரிவித்து கொள்கிறோம்.

ரசாயன வாயு கசிவுனால்  உயிரிழந்தவர்களின்  குடும்பத்திற்கு ரூ 1 கோடியும் பாதிக்க பட்டு சிகிச்சை பேருவோருக்கு  தலா ரூ10 லட்சம் நிவாரணம் வழங்க படும் என்று அறிவித்துள்ள ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு  ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் சார்பில் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம் .

எனவே : இனி வரும் காலங்களில் இது போன்ற கொர சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இயங்கி வரும் ரசாயன  தொழிற்ச்சாலைகள் முறையான பாதுகாப்பாக இயக்க படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் மத்திய , மாநில அரசுகளை வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments