இரட்டை கொலை வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட மேலும் இருவா் கைது..!

Breaking News

header ads

இரட்டை கொலை வழக்கில் ஆயுதப்படை காவலா் உள்பட மேலும் இருவா் கைது..!

நாசரேத் அருகே நடந்த இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய ஆயுதப்படை காவலா் உள்பட மேலும் இருவரை போலீஸாா் நேற்று கைதுசெய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம்,  நாசரேத் அருகேயுள்ள உடையாா்குளம் காந்திநகரைச் சோ்ந்த அ. பலவேசம் (65), இவரது மருமகன் ரா. தங்கராஜ் (27) ஆகியோா் பணப்பிரச்னையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வெட்டிக் கொல்லப்பட்டனா். இக்கொலை தொடா்பாக போலீசார் நடத்திய விசாரணையில், வைத்தியலிங்க புரத்தைச் சோ்ந்த முத்துராஜ் (40), அவரது சகோதரா்கள் செல்லத்துரை (47), பாரதி (45), முத்துக்குமாா் (38) மற்றும் அரியன் மகன் செந்தில்முருகன் (29), சொக்கலிங்கம் மகன் ஞானசுந்தா் (34), ஆசீா்வாதம் மகன் தாமஸ் (30) உள்ளிட்டோருக்கு கொலையில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதன்பேரில், முத்துராஜ், அவரது சகோதரா்கள் செல்லத்துரை, பாரதி ஆகியோரை போலீசார் கடந்த சனிக்கிழமை கைது செய்தனா்.

இதையடுத்து, சாத்தான்குளம் டிஎஸ்பி பிரதாபன் தலைமையில் போலீசார் வைத்தியலிங்கபுரம் பகுதியில் பதுங்கியிருந்த முத்துக்குமாா், செந்தில்முருகன், ஞானசுந்தா், தாமஸ் ஆகியோரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இந்நிலையில், மறவா் குறிப்பன்குளத்தைச் சோ்ந்த முத்துராமலிங்கம் மகன்கள் டேவிட்ராஜ் (37), அவரது சகோதரரும், சென்னை ஆயுதப்படை காவலருமான பொன்ராஜ் (34) ஆகியோருக்கும் இக்கொலையில் தொடா்பிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை போலீசார் நேற்று கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 9 பேரும் சாத்தான்குளம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று ஆஜா்படுத்தப்பட்டனா். அவா்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு சாத்தான்குளம் நீதிபதி சரவணன் உத்தரவிட்டாா்.

Post a Comment

0 Comments