பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் ..!

Breaking News

header ads

பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி நிவாரணம் ..!

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய்க்கு சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் 33 நிமிடங்கள் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பாதிப்புக்கு இந்தியா வழங்கிய மருந்தால், உலகம் முழுவதும் பல நாடுகளில் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். உலகம் ஒரே குடும்பம் என்பது இந்தியாவின் கலாச்சாரம் என்று கூறிய மோடி, சர்வதேச யோகா தினம் உலகிற்கு இந்தியா அளித்த பரிசு என்றார்.

வல்லரசு நாடுகளே ஆட்டம் காணும் விதத்தில் கொரோனா பாதிப்பு மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது என்று கூறிய பிரதமர், எப்படி சுய சார்புடன் இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதே தற்போது அவசியமானது மட்டுமல்ல பொறுப்பும் என்று தெரிவித்தார்.

இந்தியா சுயசார்புடைய தேசமாக எழுந்து நிற்க பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மக்கள்தொகை, அமைப்பு முறை மற்றும் தேவை என்ற 5 தூண்கள் அவசியம் என்றும், இந்தியாவின் திறனையும், சுய சார்பு கலாச்சாரத்தையும் உலகம் நம்பத் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.

தற்போது சிறந்த திறமைகளும், வளங்களும் நமக்கு இருப்பதாகவும், அதனைக் கொண்டு தரமான பொருட்களை தயாரித்து ஒட்டுமொத்த வினியோக சங்கிலியையும் மேம்படுத்த வேண்டும் என்று மோடி வலியுறுத்தினார். உள்நாட்டு தயாரித்த பொருட்களை அனைத்து இந்தியர்களும் பெருமையுடன் வாங்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். 21ஆவது நூற்றாண்டு தற்சார்புடைய இந்தியாவை அறியும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜிடிபியில் 10 சதவீத அளவாக 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு நிதி தொகுப்பு திட்டத்தை பிரதமர் அறிவித்தார்.

இது பற்றி, மத்திய நிதியமைச்சகம் இன்று விளக்கம் அளிக்கும் என்று அவர் தெரிவித்தார். விவசாயிகள், தொழிலாளர்கள், வரிசெலுத்துவோர், தொழில்துறையினர் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.

Post a Comment

0 Comments