தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறையினருக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென நடிகர் வடிவேலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா பரவாமல் தடுக்க தமிழ்நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டு, பொதுமக்களின் நடமாட்டத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள போலீசாருக்கு, தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்து நடிகர் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார்.

https://twitter.com/VadiveluOffl/status/1254802312507224065