கொரோனா எதிரொலி : சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் !

Breaking News

header ads

கொரோனா எதிரொலி : சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம் !

கொரானா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சபரிமலையில் வருகிற 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளார்.

திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும் மக்கள் திரளாக கூடும் சிறப்பு பூஜைகளை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார். இது குறித்து சபரிமலை தேவஸ்தான உயர் அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments