கோவில்பட்டியையடுத்த சிவந்திபட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்டம், திருமணிசையை சேர்ந்தவர் பாலமுருகன் - கற்பகவல்லி தம்பதி மற்றும் அவரது 8வயது குழந்தை மாலினி ஆகியோர் வந்துள்ளனர். இதையடுத்து, சிவந்திபட்டியில் திருமணம் நடைபெறும் ஸ்டேஜில் சனிக்கிழமை இரவு மாலினி விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது .அப்போது அருகில் உள்ள வாழைத்தாரை மாலினி பிடித்து விளையாடியதில் அருகே திருமணத்திற்காக அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கில் உள்ள மின்சார வயரில் இருந்த மின்சாரம் மாலினியை தாக்கியதில் அவர் காயமடைந்தார்.காயமடைந்த மாலினியை கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர் மாலினி ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறினார்.இதையடுத்து கொப்பம்பட்டி போலீஸார் சிறுமி மாலினி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு வந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


0 Comments